• 0
    Total
    Views

பொருளாதார செழிப்பு நல்லதா? கெட்டதா?

Tuesday Bilingual Service – 25 FEB 20

Transcript

பொருளாதார செழிப்பு நல்லதா? கெட்டதா?

ஆதியிலே தேவன் பூமியை உண்டாக்கி, மனுஷனை உண்டாக்கி, வைத்தபோது அதை நிறைவான ஒன்றாக உருவாக்கினார். பூமியும் அதன் நிறைவும் தேவனிடத்தில் இருந்து வருகிறது என்பது போல,நிறைவான ஒன்றாக உருவாக்கியுள்ளார். அருமையான பூமியாக அதை உண்டாக்கி மனுஷனை அதில் வைத்தார், எல்லா பொருள் ஆதாரங்களும் நிறைந்த பூமியாக அதை உண்டாக்கினார். பொருள் ஆதாரங்கள் எல்லாம் கெட்டது கிடையாது. எல்லாம் நல்லது. கர்த்தர் உண்டு பண்ணினது. எதற்காக உண்டு பண்ணியிருக்கிறார்? மனுஷனையே மண்ணிலிருந்து உண்டாக்கி இருக்கிறார்.

அவன் சரீரம் மண்ணிலிருந்தும், ஆவி தேவனிடத்திலிருந்தும் உண்டானது. ஆகவே அவன் வெறும் ஆவிக்குரியவன் மாத்திரம் அன்று. அவனுக்கு ஆவி, ஆத்துமா சார்ந்த இயல்புகளும், மண்சார்ந்த உலகப் பிரகாரமான இயல்புகளும் உண்டு. வாழ்க்கை என்பது வெறும் ஆவிக்குரிய விஷயங்கள் சார்ந்தது மாத்திரம் அல்ல. இதை பலர் புரிந்துக் கொள்வது கிடையாது. வாழ்க்கை என்பது இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று ஆவிக்குரிய பக்கம். கடவுளோடு நமக்கிருக்கிற உறவு, இணைப்பு, இதெல்லாம் தான் ஆவிக்குரிய வாழ்க்கை. இதெல்லாம் நமக்கு மிக முக்கியமான தேவையான ஒன்று தான். அது இல்லையென்றால் மனுஷ வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது.

அதேநேரம், மனுஷன் பூமியிலிருந்து எடுக்கப்பட்டவன். அவனுக்குரிய எல்லா தேவைகளும் பூமியிலிருந்து தான் நிறைவேற்றப்படவேண்டும். ஒரு மரத்தை கவனிப்பீர்களானால், மரம் தனக்கு தேவையான நீரையும், உரங்களையும் மண்ணிலிருந்தே பெற்றுக் கொள்கிறது. அது மண்ணிலிருந்து பிடுங்கி ஏறிய பட்டப் பின் அது இறந்து விடுகிறது. அவ்வாறே மனுஷனுடைய வாழ்க்கையிலும் பூமியோடு கலந்த ஒரு பகுதி இருக்கிறது. இந்த சரீரம் பூமியிலிருந்து எடுக்கப் பட்டது. ஆகவே இவன் தேவைகள் இரண்டு விதமாய் இருக்கின்றன. ஒன்று ஆவிக்குரிய ஒன்று. நாம் நிறைய அதை பற்றி பேசி இருக்கிறோம். இப்பொழுது பொருளாதார தேவை குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரம் என்பதும் மிக முக்கியம் ஆன ஒன்று தான். மனுஷனின் ஆவிக்குரிய தேவைகள் சந்திக்கப்பட்டு, பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப் படாமல், அவன் பசியும், பட்டினியுமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பானானால், அது நிச்சயம் கர்த்தர் தேவனுக்கு பிரியமான வாழ்க்கையாக இருக்காது.

எப்படி சொல்கிறேன் என்றால், ஆதியிலே தேவன் மனுஷனை உண்டாக்கின போது, அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கான ஒரு மாதிரியை உருவாக்கிக் கொடுத்தார். ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்கள் மிக முக்கியமானவைகள். அதிலே தான் அவர் எப்படி இருந்த உலகை எப்படிப் பட்ட உலகமாக மாற்றி காட்டுகிறார் என்று பார்த்தோம், எவ்வளவு ஏராளம் தாராளம் நிறைந்ததாய் இருக்கிறது என்றும் பார்த்தோம். ஆகவே அது தான் தேவனின் சித்தம் . சிலர் தரித்திரம் தான் பரிசுத்தத்தை தருகிறது, எனவே , அதுவே கர்த்தருக்கு பிரியமானது என்று கூறுகிறார்கள். அனால் அது தவறான போதனை. தேவன் எப்படிப்பட்ட உலகை உண்டாக்கி மனுஷனை அதிலே வைத்தார் என்று ஆதியாகமத்தை படித்தாலே புரிந்துக் கொள்ளலாம். பாவம் வந்து எல்லாம் கேட்டுப் போவதற்கு முன்னால் இந்த உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தேவன் எவ்வளவு முன்கூட்டியே யோசித்து, மனுஷன் வாழ என்னென்ன தேவை என்று யோசித்து,நேர்த்தியான உலகை படைத்து இருக்கிறார்.

இன்று நிறைய பெற்றோர்கள் இன்னும் பிறக்காத பிள்ளைகளுக்காக ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ டொனேஷன் கொடுத்து பள்ளிகளில் சீட் வாங்கி வைத்திருக்கிறார்கள், பிள்ளை ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. அவ்வளவு தூரம் பிள்ளைகளுக்காக ஆயத்தப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடையே மிகுந்து காணப் படுகிறது. நம் தேவன் இவர்கள் எல்லோரையும் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேலானவர். மனுஷனை உண்டாக்கும் முன்பே மனுஷனுக்கு என்னென்ன தேவையோ அதை முதலில் உண்டாக்கினார். கடைசி சிருஷ்டிப்புதான் மனுஷன். ஒவ்வொன்றாய் யோசித்து எல்லா தேவைகளுக்குமான காரியங்களை அறிந்து தேவன் உண்டாக்கி இருக்கிறார். அவர் ஆறு நாட்களில் எல்லாவற்றையும் உண்டாக்கினார். கடைசியாக மனுஷனை உண்டாக்குவது அவன் எல்லாவற்றிலும் முதன்மையானவன் என்பதால் தான், அவனுக்காகத்தான் எல்லாம் உண்டாக்கப் பட்டிருக்கிறது. மனுஷனை உண்டாக்கி விட்டு அவன் வந்ததற்குப் பிறகு அது இல்லை இது இல்லை என்று இருக்கக் கூடாது என்பதற்காக, எல்லாவற்றையும் திட்டமிட்டு உண்டாக்கியிருக்கிறார்.

அவர் சிருஷ்டித்ததிலிருந்து மனுஷன் நிறைய உண்டாக்கி இருக்கிறான். ஆனால் தேவன் ஒன்றும் இல்லாமையிலிருந்து வானத்தையும்,பூமியையும், சகல ஜீவ ஜந்துக்களையும், மரங்களையும், மலைகளையும் , நீர் ஆதாரங்களையும் உண்டாக்கி இருக்கிறார். சிலர் இவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்கள், கடவுள் அவனுக்கு துணையை கொடுக்கவில்லை, மற்ற விலங்குகள் எல்லாம் ஜோடி, ஜோடியாக வருவதைக் கண்டு, ஆதாம் தேவனிடம் வேண்டிக் கேட்டதால், அவனுக்கு ஏற்ற பெண்ணை உண்டாக்கினார் என்று கூறுகிறார்கள். அது தவறு. அவனை உண்டாக்கும் போதே ஆணும் பெண்ணுமாக உண்டாக்கி இருக்கிறார். பெண்ணை அவனுள் வைத்து அவனை உண்டாக்கி இருக்கிறார். ஏற்ற நேரத்தில் அவளை அவனில் இருந்து வெளியே எடுத்து தருகிறார். எவ்வளவு முன்யோசனையோடும், ஆயத்தத்தோடும் மனுஷனை உண்டாக்கி இருக்கிறார் என்று பாருங்கள். அவன் எதற்கும் குறைவின்றி இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். அப்படியொரு paradigm மை தான் ஆதியிலே ஏதேன் தோட்டத்திலே உருவாக்கி இருக்கின்றார். ஒன்றுக்கும் குறைவில்லாத வாழ்க்கை தான் அவன் வாழ வேண்டும் என்று அமைத்து தந்து இருக்கிறார்.

மனுஷன் பின்னாளில் பாவத்தில் விழுந்து போகிறான். ஏதேனை விட்டு வெளியேற்ற படுகிறான். ஏதெனில் தாம் அனுபவித்த அத்தனை பொருள் ஆதாரங்களையும், ஆசீர்வாதங்களையும் இழந்து போகிறான். ஆவிக்குரிய வாழ்க்கையையும், பொருளாதார வாழ்க்கையையும் இழந்து போகிறான். இரண்டும் போய்விட்டது. அதனால் மனுஷன் மிகவும் கஷ்டப்படுகிறான். அவ்வாறு துன்பப்படுகிற மனுஷனை எவ்வாறு பழைய நிலைக்கு கொன்டு வருகிறார் என்பது தான் மூன்றாம் அதிகாரத்தில் இருந்து வெளிப்படுத்துதல் 22 வரைக்கும் நாம் வாசிப்பது அதை பற்றி தான். வெளிபடுத்துதல் 22 படித்து பாருங்கள், பரலோகம் எவ்வாறு இருக்கிறதென்று, அது திரும்ப ஆதியாகமம் ஒன்றிலிருந்து ஆரம்பிப்பது போல இருக்கும். கடைசி இரண்டு அதிகாரங்களை வாசித்து பாருங்கள், ஆதியாகம் முதல் இரண்டு அதிகாரங்கள் போலவே இருக்கும். ஆதியிலே எவ்வாறு paradigm மை உண்டாக்கினாரோ அதையேதான் கடைசியிலும் அதே paradigm மை தான் கொண்டு வருகிறார்.

நடுவிலேயும் அதே paradigm மிற்குள் நம்மை அழைத்து செல்வதை பார்க்கலாம். எங்கே என்றால், எகிப்திலே இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் கஷ்டப்படும் போது, பாலும் தேனும் ஓடுகின்ற நலமும் விசாலமுமான கானானுக்குள் அவர்களை கூட்டிச் சேர்க்கும் போது. அண்ட ஒரு குடிசை, அரை வயிற்றுக் கஞ்சி, என்று கஷ்டப்படுகிற மக்களை தமது பலத்த கரம் கொண்டு விடுவிக்கிறார். இது தான் மீட்பு, இதான் இரட்சிப்பு, இரட்சிப்புக்கு இது தான் மாதிரி என்று நான் சொல்லவில்லை, வேத வசனமே சொல்கிறது. பவுல் சொல்லும் பொழுது, ‘நாம் அதிலிருந்து நிறைய காரியங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மூலமாய் உண்டாகும் இரட்சிப்பிற்கு அது நிழலாட்டமாய் இருக்கிறதுஎன்று. இஸ்ரவேலரை விடுவித்து ஏதோ வனாந்தரத்திலோ, மன்னாவை மட்டும் உண்டு வாழும் படிக்கோ விட்டு விடவில்லை. மாறாக பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமும் நிறைந்த, திருப்தியாய் உண்டு புசிக்கிற , ஒன்றுக்கும் குறைவுபடாததுமான தேசத்தில் வாழ வைக்கிறார். 37

நல்ல தேசம் என்று நான் சொல்லவில்லை, கர்த்தர் சொல்கிறார் என்று வேதம் சொல்கிறது. பாவத்தினால் கேட்டுப் போன மனுஷனை திரும்ப அழைத்து, என்ன மாதிரியான நிலையில் வைக்க விரும்புகிறார்? ஆதியிலே, சிருஷ்டிப்பின் போது வைத்த அதே நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். சிலரால் இதை நம்ப முடிவதில்லை, ஏனெனில் பலநேரங்களில் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. நிறைய கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டியதாய் இருக்கிறது. தேவைகளை சந்திப்பதென்பது போராட்டமாய் மாறிப் போய் விடுகிறது. அதனால் என்ன சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், இதெல்லாம் பரலோகத்தில் தான் சாத்தியப் படும் என்றும், இங்கு அதற்கு வாய்ப்பில்லை என்றும், இறந்த பிறகு தான் பாலும் தேனும் ஓடுகிற தேசம் கிடைக்கும் என்றும் போதிக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சிலர், பரலோகத்தை பரம கானான் என்று பெயர் வைத்து பாட்டெல்லாம் கூட பாடிவிட்டார்கள்.

பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் இஸ்ரவேல் மக்களைக் கொண்டு வந்து சேர்த்தார். அது போல நம்மையும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது தான் கர்த்தரின் சித்தமாய் இருக்கிறது. நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய பிரகாரமான தேவைகள் மாத்திரம் அல்ல, உலகப் பிரகாரமான தேவைகளும் சந்திக்கப்பட வேண்டும், நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பது கர்த்தரின் நோக்கமாய் இருக்கிறது. இதை நாம் நன்றாக புரிந்துக் கொண்டால் தான் வெற்றிகரமான, சந்தோஷமான வாழ்க்கையை நாம் வாழ முடியும். நாம் நன்றாக வாழ முடியும். இதை போதிக்காததினால் தான்,கிறிஸ்தவர்கள் உலகத்தானாய் இருந்தால் தான் நன்றாக வாழ முடியும், நாமெல்லாம் நன்றாக வாழ முடியாது என்ற முன்முடிவிற்கு வந்து விட்டார்கள்.

நாம் இறந்ததற்கு பிறகு பரலோகத்தில் தான் இதை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். அவர்களே கூட ஏதேன் , போன்ற மாதிரியை ஏற்றுக் கொண்டாலும், பரலோக ராஜ்யத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், நடுவில் அது போன்ற பரலோக ராஜ்யத்தை கொண்டு வருகிறார் என்பதை தான் அவர்களால் நம்ப முடிவதில்லை. அது அவ்வாறு சொல்லப் படவில்லை. புதிய ஏற்பாட்டில் கூட சொல்ல படவில்லை என்று கூறுகிறார்கள். இயேசு கூட அவ்வாறு கூறவில்லை என்று சொல்லுகிறார்கள். அதற்காகத்தான் நான் முதலில் இருந்து வருகிறேன். முதல் ஐந்து புஸ்தகங்களை வாசித்தோம். இப்போது தீர்க்க தரிசன புஸ்தகமான அமோசை வாசிக்கிறோம், ஏனெனில் ஆமோஸ் மிக கடினமான சொற்களால் மக்களை கண்டிக்கிறார். அதற்கு பிறகு சங்கீதம், நீதிமொழிகள் போன்றவற்றிற்கு வருவோம்.எனவே ஆமோஸ் புத்தகத்தை முதலில் வாசிப்போம்.

எல்லா தீர்க்கதரிசன புத்தகங்களையும் வாசிப்பதில்லை, மாறாக ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போல், ஆமோஸ் புஸ்தகத்தை மட்டும் வாசிக்கப்போகிறோம். அவர் மிக கடினமான, தடித்த வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் யாரை திட்டுகிறார் என்று பார்த்தோமானால், நல்ல வீடுகளைக் கட்டி, சொகுசுக் கட்டில்களில் உறங்கி, செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்களை பார்த்து திட்டுகிறார். பலர் இதை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, பொருளாதார செழிப்பை பாவம் என்பது போல் போதித்து விட்டார்கள். வேதத்திலிருந்து எல்லாவற்றுக்கும் ஏதுவான வசங்களை நாம் பெற்று விட முடியும்.

வாசிப்போம் ஆமோஸ் 6 , 4 -7 வசனங்களை.

தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,

தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,

பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.

ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும்.

இந்த வசனங்களை வைத்துக் கொண்டு, நல்ல வீட்டில் இருப்பது தவறு, நல்ல கட்டில்களில் இருப்பது தவறு, நல்ல விருந்தினை உண்டு மகிழ்வது தவறு, என்று வியாக்கியானம் செய்வது தவறு. இதை நாம் இவ்வாறு தான் புரிந்துக் கொள்ள வேண்டுமா? ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற தீர்க்க தரிசிகளை விட்டு விட்டு சிறிய தீர்க்க தரிசன புத்தகமான அமோஸுக்கு வந்து விட்டேன், ஏனெனில் இது போன்ற பல வசனங்களில் அவர்களும் நிறைய திட்டி இருக்கிறார்கள். எல்லா தீர்க்க தரிசிகளும் திட்டு திட்டென்று திட்டினாலும், யாரும் நல்ல வீட்டில், நல்ல கட்டிலில், இருக்க கூடாது என்ற மாதிரியை அவர்கள் முன்வைக்க வில்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். நன்றாக வாழ்வதையே தவறு என்பது போன்ற மாடலை அவர்கள் ஒருபோதும் போதிக்க வில்லை என்பதையே இங்கு காண்பிக்க விரும்புகிறேன். செழிப்பை தவறு என்று போதிப்பது, ஆதிஆகமத்திலே முதல் இரண்டு அதிகாரங்களையும் தவறு, தேவன் உண்டாக்கிய மாடல் தவறு என்று வியாக்கியானம் செய்வது போல் ஆகிவிடும்.

ஏதேன் தோட்டத்தை எப்படி பட்ட இடமாக உண்டாக்கினார்? ஒரு மனிதனுக்கு நான்கு நதிகள், ஆயிரக்கணக்கான மரஞ்செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பொன் விளைகிற பூமி, என்று அல்லவா உருவாக்கிக் கொடுத்தார். அவருக்கு தெரிந்திருக்காதா, அளவிற்கு அதிகமாக கொடுத்தால் அவன் கெட்டு விடுவான் என்று, சரி மீண்டும் எதற்காக அடிமைத்தளையிலிருந்து மீட்டு பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு கொண்டு செல்கிறார்? ஏற்கனவே அவன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்து ஆசீர்வாதங்களை இழந்து நிற்கிறான், எனவே அவனை வனாந்தரத்திலேயே வைத்துவிடுவோம் என்றோ, மண்ணாவினால் மட்டும் அவன் வாழும்படிக்கு செய்து விடுவோம் என்றோ அவர் நினைக்கவில்லை. சிலர் ஏதேன் தோட்டத்தில் செய்த தவறை மீண்டும், கானானிலும் தேவன் செய்து விட்டார் என்று போதிக்கின்ற அளவிற்கு கூட சென்று விடுகிறார்கள்.

தேவன் தவறுகிறவர் அல்ல. அவர் திட்டத்தில், நோக்கத்தில் பிழை இருக்க வாய்ப்பில்லை. நாம் தான் தவறு செய்கிறோம், மாற வேண்டியது நாம் தான். சிலர் கடவுளையே மாற்ற நினைக்கிறார்கள். கடுமையான உபவாசம் இருந்த ஒருவரிடம், எதற்காக உபவாசம் இருக்கிறீர்கள் என்றுக் கேட்டேன். தான் நீண்ட நாட்களாய் ஒரு காரியத்தைக் குறித்து தேவனிடம் ஜெபித்துக் கொண்டு இருப்பதாகவும், இந்த முறை உபவாசித்தாவது நிச்சயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பதாக கூறினார். பாருங்கள் சிலர்

இப்படித்தான் கடவுளையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேவன் தெளிவாக சொல்லி விட்டார், நான் நேற்றும்,இன்றும், என்றும், மாறாதவர் என்று. கர்த்தர் இஸ்ரவேலரை நலமாக மீட்டது சரி, அவர்களுக்கு செய்த எல்லாமுமே சரி. ஆனால் தீர்க்க தரிசிகள் ஏன் திட்டுகிறார்கள்? தந்தக் கட்டிலில் படுப்பது குற்றமா? ஆட்டு குட்டிகளையும், கன்றுகளையும் உண்பது தவறா? சிலர் கறி மீன் சாப்பிடுவது தவறு என்று இதை படித்துவிட்டு போதிப்பவர்கள் கூட உண்டு. தாவீதை போல தம்பூரை வாசிப்பது குற்றமா? அப்படியானால் தாவீது செய்தது குற்றமாகுமே ? அப்படி என்றால் தாவீது செய்தது குற்றமாகி விடுமே. சங்கீதம் இசைப்பதும், கருவிகளை இசைப்பதும் குற்றமாகி விடுமே. தீர்க்க தரிசிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்வது மிக அவசியம்.

(——————) 50. வான் ராட் என்ற பழைய ஏற்பாட்டு போதகர் அந்த காலத்திலே மிக பிரபலமானவர். அவர் ஆமோஸ் புத்தகத்தை படித்து நாம் படித்த வசனங்களை பற்றி வியாக்கியானம் பண்ணும் போது, எல்லாவிதமான துறவறம் போன்ற வாழ்க்கை, பொருளாதார எதிரான சிந்தனைகளோ, அல்லது பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற பழக்கமோ யூதர்கள் மத்தியிலே கிடையவே கிடையாது. அவர்கள் அதை அவ்வாறு ஏற்றுக் கொள்ளவே இல்லை. துறவறத்தை ஆவிக்குரிய ஜீவியத்தின் உயர்ந்த நிலையாக அவர்கள் கருதுவது கிடையாது என்று கூறுகிறார் . எத்தனை பேர் நம்புகிறீர்கள் யூதர்கள் பழைய ஏற்பாட்டு நூலை நன்கு கற்று வளர்ந்தவர்கள் என்று. நல்ல கட்டிலில் தூங்காதே, கறி மீன் சாப்பிடாதே, விருந்துகளை கொண்டாடாதே, இசை கருவிகளை மீட்டாதே என்று இப்பொழுது சிலர் வியாக்கியானம் பண்ணுவது போல் அன்றைய பழைய ஏற்பாட்டுக்கார பிரசங்கியாரும் போதித்ததில்லை.

ஒரிஜினல் ஆடியன்ஸ் யார் என்றால் அவர்கள் தான். அவர்கள் அதை தவறாக புரிந்துக் கொள்ளவில்லை. இன்றைக்கு நாம் அதை படித்து விட்டு அதை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மேலும் அவர் ராட் அவர்கள் கூறும் பொழுது, நன்றாக உண்டு, குடித்து, தனக்கு பிடித்தமான காரியங்களை செய்வதை, நல்ல ஆசீர்வாதமான வாழ்க்கையை , அவர்கள் மகிழ்ச்சியான உள்ளத்தோடு, கடவுளுக்கு நன்றி கூறி, அதை ஏற்று, அனுபவிக்கவே செய்தார்கள். அவர்கள் தான் ஒரிஜினல் ஆடியன்ஸ். அவர்கள் அதை எவ்வாறு புரிந்துக் கொண்டார்கள் என்பது மிக முக்கியம். இன்றைய கால கட்டத்தில், நாம் அதை எவ்வாறு புரிந்து, அதிலிருந்து என்ன படிப்பினையைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பது இரண்டாவது. அவர்களுக்கு எவ்வாறு புரிந்திருக்கும் என்பதை வைத்து தான் நாம் வியாக்கியானம் பண்ண வேண்டும். இன்றைக்கு நாம் இருக்கும் கால கட்டத்தை வைத்துக் கொண்டு, அவர்கள் துறவறம் சிறந்தது என்று பிரசங்கித்தார் என்று புரிந்துக் கொள்ளக்கூடாது. இதை வைத்து எந்த பொருளாதார நன்மைகளையும் அனுபவிக்க கூடாது என்று போதிக்க வில்லை. இவை எல்லாம் கர்த்தர் எனக்கு கொடுத்த ஈவுகள், அவை நல்லது, என்று கர்த்தருக்கு நன்றி சொல்லி, அவைகளை ஏற்று, அனுபவித்து, கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டும். அப்படிதான் அவர்கள் யோசித்தார்கள். அப்புறம் ஏன் இங்கு திட்டுகிறார்?

ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே கர்த்தரை மறந்து போனார்கள். கர்த்தரை கணம் பண்ணாமல், நல்ல விதமாய் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழாமல், தன்னிச்சைப்படி, கர்த்தருடைய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான ஒரு பாவ வாழ்க்கையை வாழ்ந்து, அதன் மூலம் உண்டான செழிப்பினால், செருக்குற்று, இறுமாப்புடன், இரக்கமின்றி, ஏழைகளை நசுக்கி, ஒடுக்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் தான் திட்டுகிறார். நாம் அதை எடுத்துக் கொண்டு, உழைத்து முன்னேறுகிற எல்லா கிறிஸ்தவர்களையும் திட்டுவது தவறு. கடவுள் நல்லது எனக் கண்டவற்றை நல்லதில்லை என்றுக் கூறாதீர்கள். நல்லது, நல்லது என்ற எண்ணம் நம் உள்ளத்திலே வர வேண்டும். ஆசீர்வதித்து தான் அவர் சித்தம், அது தான் அவர் உண்டாக்கி வைத்திருக்கிற paradigm . செழிப்பாக இருக்கிறவனைப் பார்த்து, திட்டு திட்டென்று திட்டிவிட்டு, ஊழியத்திற்கும், சர்ச்சுக்கும் நிறைய காணிக்கை கொண்டுவா என்றால், அவர்கள் எவ்வாறு கொண்டு வருவார்கள். அவர்கள் உள்ளத்திலே செழிப்பைக் குறித்து தவறான அபிப்பிராயங்களை எழுப்பி விட்டு, அவர்களிடத்தில் காணிக்கையை மட்டும் எதிர் பார்த்தால், அவர்களுக்கு குழப்பம் வராதா அவர்கள் போதனையைக் குறித்து.

எங்கே ஆரம்பித்தோம் ஆதியாகமம் 1 . 31 . அங்கே என்ன சொல்ல பட்டு இருக்கிறது. தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது நன்றாய் இருந்தது. அது நல்லதெனக் கண்டார். அவர் நல்லது என்ற கண்டதை இவர்கள் நல்லதில்லை என்ற சொல்வதில் இருந்து வருகிறது இந்த பிரச்சனை. கர்த்தரை தங்கள் வாழ்வில் ஒரு பொருட்டாக எண்ணாமல், தமது இச்சையின் படிக்கும், சுய விருப்பங்கள் படியும் தாறுமாறாய் வாழ்பவர்களைக் குறித்து எச்சரிக்கிறார், கண்டிக்கிறார். கடிந்துக் கொள்கிறார். அவர்களை திட்டலாமா என்றால் கண்டிப்பாக திட்டலாம். கடிந்துக்கொள்ள தகுந்தவர்கள் அவர்கள் தான். விசுவாசிகளையோ, உண்மையாக உழைத்து சம்பாதிப்பவர்களையோ, அவர்களது உழைப்பின் கனியையோ கடிந்துக் கொள்வது தவறான காரியம்.

(_____________)1 .02 .30 . என்ன சொல்கிறார் என்றால் வாழ்க்கையில் சில சௌகரியங்கள் இருப்பது தவறு இல்லை. எல்லாவற்றையும் தப்பு தப்பு என்ற எண்ணத்தோடு அணுகத் தேவையில்லை. ஏதேன் எவ்வாறு தவறு இல்லையோ அது போல நம் செழிப்பும் தவறு இல்லை. நல்ல காரியங்களை நன்மையான விதங்களில் அனுபவிப்பது கர்த்தர் நமக்கு கொடுத்த கொடை. கர்த்தர் பூமியில் மனுஷனை உண்டாக்கி அவனுக்கென்று சில கொடைகளை கொடுத்திருக்கிறார், ஒன்று ஆளுகை, இன்னொன்று அனுபவித்து மகிழ்வது. இன்னொன்று மரியாதை. டிக்னிட்டி எங்கிருந்து வருகிறது அவரது சாயலாக படைக்கப்பட்டதன் மூலமாக வருகிறது. மனித உரிமை, சுயமரியாதை, போன்ற கருத்துக்கள் மனித சமூகத்தில் எங்கிருந்து பெறப்பட்டன என்றால் வேதத்திலிருந்து. ப்ரோட்டஸ்டன்ட் போதனைகளின் மூலமாக விளைந்தவை.

அவனிடத்திலிருந்து எடுக்க முடியாத, பிரிக்க முடியாத சில உரிமைகளை கர்த்தர் அவனிடத்திலே கொடுத்திருக்கிறார். எவரும் எடுக்கமுடியாது ஏனெனில் அது கர்த்தர் கொடுத்தது. தனது சாயலாகவும், தனது ரூபத்தின் படியும் மனுஷன் உண்டாக்கப்பட்டதினால், அவனுக்கு மரியாதை இருக்கிறது. அதனால் அவன் சிருஷ்டிக்கப் பட்டவைகளை வணங்குகிறது இல்லை. சிருஷ்டிப்புக்கள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டவை என்பது தான் கிறிஸ்தவ பார்வை. உங்களை பற்றிய ஆச்சர்ய உணர்வு உங்களுக்கு வேண்டும், நமக்குள் இத்தனை மேலான காரியங்களை கடவுள் வைத்துள்ளாரா என்று எண்ணிப் பெருமை பட வேண்டும். சூரியன், சந்திரன் ,ஆகாயத்தைக் காட்டிலும் நாம் உயர்ந்தவர்கள் என்பதை உணர வேண்டும். எனவே சிருஷ்டிப்புக்களை அல்ல சிருஷ்டித்தவரையே வணங்க வேண்டும். ஆனால் சிருஷ்டிப்புக்களுக்கு உண்டான மதிப்பை நாம் கொடுக்க வேண்டும் ஏனெனில் அவைகளும் கர்த்தரால் உண்டாக்கப் பட்டவையே.

அமோஸில் ஏன் திட்டுகிறார் என்றால், அவர்கள் எல்லாவற்றையும் வைத்து அநியாயமாக நடந்துக்க கொள்கின்றனர், அதனால் திட்டுகிறார். சிலர் ஜெபிக்கும் பொது கூட நான் புழு, பூச்சி, குப்பை, தூசி என்று தங்களை கூறிக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வேதத்திலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டுகின்றனர். வேதத்தை அப்படி வாசிப்பது தவறு. ஒவ்வொரு வசனத்தையும் அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவன் நாண்டு கொண்டான், நீயும் போய் அவ்வாறே செய், அதை இப்பொழுதே உடனே போய் செய் என்று கூட இருக்கிறது. அதை படித்து விட்டு, அந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டு விட்டால் காரியமே கேட்டு விடும். அது யாருக்கு, எப்பொழுது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பது பற்றி பகுத்து அறிய வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் தினமும் உங்களிடம் வந்து நான் தூசி, குப்பை, நான் ஒரு புழு, நான் அறுகதை அற்றவன் என்ற பாணியிலே உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எவ்வாறு இருக்கும். அது போல தான். கடவுளின் சாயலாக படைக்கப் பட்டு, அவரால் ஆண்டுக்கொள்ள உரிமையை பெற்றவர்கள் என்ற எண்ணம், மரியாதை நமக்கு வேண்டும். நம்மை பற்றிய நல்ல மதிப்பீடு நமக்கு வேண்டும். கொஞ்சம் கூட யோசிக்காத ஆட்கள் தாம் இவ்வாறெல்லாம் வியாக்கியானம் செய்வார்கள். நன்றாக இருந்தாலே அதை பாவம் என்பது போல் போதிப்பது. இரண்டு விதமான காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று தாவீதை போல தம்புரை வாசித்து,- என்றால் தாவீதின் காலத்திலே, ஆலயத்தில், இருபத்திநாலு மணிநேரமும் கர்த்தரை துதிப்பதற்கான ஆட்களை நியமித்து வைத்து இருந்தான். அது தவறானதில்லை. அது நல்ல விதத்திலே வருகின்ற மகிழ்ச்சி.

கர்த்தர் கொடுத்த செல்வதை நியாயமாக செலவழித்து, அவரை புகழ ஆட்களை நியமித்து, மகிழ்ச்சியை அடைகிறான். ஆனால் ஆமோசின் காலத்து செல்வந்தர்கள் மேடும் இசையை கண்டனம் செய்கிறார். நீ வாசிப்பது எனக்கு பிடிக்கவில்லை, ஏனெனில் உன்னை எனக்கு பிடிப்பதில்லை, உன் எண்ணங்களை, உன் செயல்களை, நீ ஏழைகளை நசுக்கி பிழிகிறதை, நீ ஏமாற்று வழிகளில் நடப்பதை, என் கொள்கைகளுக்கும்,எண்ணங்களுக்கும் மாறாக நடந்துக் கொள்ளும் விதங்களை எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் கர்த்தர் ஆமோசின் வழியாக. என்னை முதலில் கணம் பண்ணு என்கிறார் கடவுள் .உன் இசையில், உன் செழிப்பில், உன் விருந்தில், உன் நடத்தையில் என எல்லாவற்றிலும் ஒரு பொல்லாப்பு ஒளிந்திருக்கிறது.

இரண்டாவது மேற்கோளாக யோசேப்பிற்கு நேர்ந்த ஆபத்திற்கு கவலை படாமல் போகிறார்கள் ஆமோஸ் 6 6 என்ற இடத்தில இஸ்ரவேல் ஜனங்கள் நியாயம் செத்துப் போகிறதை பற்றி கவலை இன்றி இருப்பதைக் குறித்து திட்டுகிறார். அவர்களுக்கு இரக்கம் என்பது துளியும் இல்லாமல் போய்விட்டதைக் குறித்து கண்டிக்கிறார்.நியாயத்தையும் நீதியையும் பெரிதாக எண்ணாமல், அதற்காக போராடாமல், அதை பற்றி சிறிதும் கவலையின்றி உண்டு கொழுத்து மகிழ்கிறார்கள். அதை தான் கண்டிக்கிறார்.

விருந்து கொண்டாடல் தவறா? யேசுக் கிறிஸ்து விருந்துக்கு கொண்டாடலைப் பற்றிக் கூறும் போது, ஒரு கதை ஓன்றைக் குறிப்பிடுகிறார் . ஒருவன் பெரிய விருந்தொன்றை உண்டு பண்ணி எல்லோரையும் பெரிய விருந்தொன்றுக்கு அழைத்தான் என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்றால், சுவிசேஷத்தை நம்பும் படிக்கு, கடவுளை எற்றுக்கு கொள்ளவும், ரட்சிப்பை அனுபவிக்கவும் வரும்படிக்கு அழைப்பதாக விருந்தை குறிப்பிடுகிறார். ஆனால் அழைக்கப்பட்ட எவரும் வரவில்லை, எனவே வெளியே நின்றிருந்தவர்களை அழைத்து செல்கிறார். இவ்வாறாக விருந்து பற்றிய காட்சியை விவரிக்கிறார். நற்செய்தி என்பதே ஒரு பெரிய விருந்தைப் போல. பரலோகராஜ்யம் என்பதே விருந்துக்கு அழைக்கப் பட்டதை போல ஒன்றாக கூறுகிறார் . ஆகவே விருதுன்னல் என்பதே பாவ காரியம் கிடையாது. அமோஸ் இஸ்ரவேலரை அவர்கள் தீய வழிகளில் வந்த செல்வத்தினால் அனுபவிக்கும் விருந்தினையே திட்டுகிறார்.

இஸ்ரவேலர்களை மட்டும் கண்டிக்க வில்லை , பக்கத்திலிருக்கும் மற்ற தேசங்களையும் திட்டுகிறார். சிரியா, காஸா, தீரு, ஏதோம், அம்மோனியர்கள், போன்ற பிற இனத்தாரையும் கடுமையாக சாடுகிறார். அவர்கள் அனைவரும் உடன்படிக்கையின் மக்களாக இல்லாதபோதும் அவர்களையும் பல முறை அடிமைத்தனத்திலிருந்து மீது வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் விடுதலை ஆன பிறகு அவர்கள் தங்களை நடத்திய விதத்திலேயே மற்றவர்களை அடிமை படுத்தினார்கள். கர்த்தர் அவர்கள் பாவங்களை மன்னித்தார், ஆனால் அவர்கள் மன்னிக்க தயாராக இல்லை. அவர் விடுதலைஆக்கினார் , ஆனால் அவர்கள் அடிமைப்படுத்தினார்கள்.

ஆமோஸ் 5 ஆம் அதிகாரம்,21 -24 வரை. உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.

பண்டிகைகளையும்,ஆசரிப்பு நாட்களையும் கொடுத்ததே தேவன் தான். ஆனால் அவரே அவற்றை இப்போது வெறுக்கிறேன் என்கிறார். உன் பாடல்களை, உன் தகனைப் பலிகளை நான் வெறுக்கிறேன் என்பதன் பொருள், உன் உள்ளம் சரியானதாக இல்லை என்று பொருள். உள்ளே பொய்யும் புரட்டும் அக்கிரமும் நிறைந்ததாய் இருக்கிறது அதனால் கர்த்தரின் பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது. கர்த்தர் வேறு எதை எதிர் பார்க்கிறார்? நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியை போலவும் இருக்கும் இடத்தில் கர்த்தர் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார். கர்த்தர் நம்மை உயர்த்துவதன் நோக்கம் நாமும் மற்றவரை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான். நியாயம் செத்துப் போகும் போது அதற்காக துக்கப்பட்டு, வருத்தப்பட்டு, பாரத்தோடு ஜெபிக்கும் இருதயத்தை கர்த்தர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

Similar Topic

Malcare WordPress Security